Nerkonda Paarvai special show : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Nerkonda Paarvai special show :

அஜித் ரசிகர்கள் ஸ்பெஷல் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்து வருகின்றனர் இந்த ஸ்பெஷல் ஷோவில் வழக்கறிஞர்கள் மட்டுமே படத்தைப் பார்க்க முடியுமாம்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

2.0, மெர்சலை தொடர்ந்து விஜய் சேதுபதி படம் – மாஸான அப்டேட்!

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் ஆக இந்த ட்ரைலர் வெளியானது போல் படமும் சர்ப்ரைசாக முன்கூட்டியே வெளியாக உள்ளதாம்,

அதாவது முன்னதாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட இப்படம் தற்போது ஜூலை 25ம் தேதி அல்லது ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஸ்பெஷல் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்து வருகின்றனர் இந்த ஸ்பெஷல் ஷோவில் வழக்கறிஞர்கள் மட்டுமே படத்தைப் பார்க்க முடியுமாம்.

வழக்கறிஞர்களுக்கான ஐடி கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தக் காட்சிக்கு அனுமதிக்கப்படுவார்களாம். படம் வெளியாகும் முதல் நாள் காலை 10 மணி காட்சிக்கு இந்த ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.