Nerkonda Paarvai

Nerkonda Paarvai Review : நேர்கொண்ட பார்வை குறித்து போனி கபூர் ட்வீட் செய்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்துக்கு மனைவியாக வித்யா பாலன் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் நிறைவடைந்திருந்தன. மேலும் இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளன.

இந்நிலையில் தற்போது போனி இப்படத்தை பார்த்து விட்டு அவரது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். அஜித்தின் நடிப்பு பிரமாதமாக அமைந்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் ஹிந்தியில் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை இருபதாகவும் அவரிடம் 3 கதைகள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நேர்கொண்ட பார்வை குறித்த விமர்சனத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் இன்னும் 3 ஸ்கிரிப்ட் இருக்கிறது என கூறியது மீண்டும் சிவாவை போல தொடர்ந்து போனி கபூருடனே கூட்டணியா? எனவும் ஷாக்காகியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.