Nerkonda Paarvai Release Problem : Shocking Update | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News | Thala Ajith
நேர்கொண்ட பார்வை படத்திற்கு வந்துள்ள சிக்கல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nerkonda Paarvai Release Problem : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள உருவாகியுள்ள திரைப்படம் தான் நேர்கொண்ட பார்வை.

எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல நடிகர் நடிகைகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அஜித்திற்கு வாழ்க்கை கொடுத்த படத்தில் நடிக்க இருந்தது விஜயா? – 23 வருடத்திற்கு பின்பு தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம்.!

இதுவரை இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்களும் டிரைலரும் வெளியாகியுள்ளது. மேலும் சென்சார் பணிகள் முடிவடைந்து U/A சான்றிதழ் கிடைத்துள்ளன.

ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் இது வழக்கமான அஜித் படம் இல்லை என்பதாலும் அஜித் நீண்ட நேரம் திரையில் வருவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் இருப்பதால் பல தியேட்டர் உரிமையாளர் அதிக தொகைக்கு வாங்க அச்சப்பட்டடுவதாக கூறுகின்றனர்.

குறிப்பாக தென் தமிழகத்தில் தான் அதிகமான தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகின்றனர். இது போன்ற பிரச்சனை அஜித் படத்திற்கு இதுவரை வந்ததில்லை என்பதால் ரசிகர்களுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.