Nerkonda Paarvai

NKP Release Date : நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ரிலீஸ் தேதி அஜித் ரசிகர்களை கொஞ்சம் அப்செட்டாக்கியுள்ளது.

தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலாசிரியர் யார் தெரியுமா? – இது செம கூட்டணி தான்.!

அஜித்தின் பிறந்த நாளான மே 1-ல் இப்படம் வெளியாகும் என படப்பிடிப்புகள் தொடங்கும் போது கூறப்பட்டு வந்தது. ஆனால் அதன் பின்னர் ஜூலை அல்லது ஆகஸ்ட்டுக்கு தள்ளி போவதாக கூறப்பட்டு வந்தது.

இதனை தற்போது அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளார் அஜித்தின் பி.ஆர்.ஓ-வான சுரேஷ் சந்திரா.

ஆம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.

***தா நான்… ரசிகரை அசிங்கமாக திட்டிய யாஷிகா – காரணம் இந்த கேள்வி தான்.!

மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்க்கு தள்ளி போய் இருப்பது ரசிகர்களை கொஞ்சம் அதிர்ச்சியாக்கி இருந்தாலும் படம் ரிலீசாகும் சமயம் தொடர் விடுமுறை என்பதால் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.