Nerkonda Paarvai Movie Response : Theatre's Official Tweet.! | Thala Ajith | Nerkonda Paarvai | NKP | Kollywood Cinema News
நாளுக்கு நாள் கூட்டம் குவிந்த வண்ணம் இருப்பதால் தியேட்டர் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Nerkonda Paarvai Movie Response : எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குடும்பத்துடன் பார்த்து பாராட்ட வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், வெகுஜன மக்கள் என பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

நெல்லையில் உள்ள ரேம் முத்துராம் சினிமாஸ் தியேட்டரில் இந்த படத்திற்கு கூட்டம் அலைமோதி கொண்டே இருப்பதால் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது தியேட்டர் நிர்வாகம்.

இது குறித்து பதிவிட்டுள்ள டீவீட்டில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மிட் நைட் ஷோ இரவு 1 மணிக்கு கூடுதல் காட்சி ஒன்றை இணைத்து இருப்பதாக அறிவித்துள்ளது..

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.