nerkonda-paarvai

Nerkonda Paarvai Lyricist : நேர்கொண்ட பார்வை படத்தின் பாடலாசிரியர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உறுதியானது தலைவர் 166 இசையமைப்பாளர் – அவரே வெளியிட்ட அதிரடி தகவல்.!

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்சீ மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.

அமிதாப் பச்சன் ரோலில் அஜித் நடிக்க டாப்சீ ரோலில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடிக்கிறார். மேலும் ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு பாடல்களை எழுதி வருவது யார் தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. ரசிகர்களின் பேவரைட் பாடகரான கவிஞர் பா. விஜய் தான்.

ரசிகர்கள் எதிர்பார்த்த காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

இதனை அவரே சமீபத்தில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற போது கூறியுள்ளார். இதனால் இப்படத்தின் பாடல்களும் தரமாக இருக்கும் என ரசிகர்கள் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.