Nerkonda Paarvai First Review : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.

Nerkonda Paarvai First Review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தை பற்றிய முதல் விமர்சனத்தை பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான ரவீந்திரன் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட பிகில் போஸ்டர் – ஒரிஜினல் போஸ்டர் இதோ.!

கூர்க்கா படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரவீந்தரன் நான் ஒரு பெரிய பட்ஜெட் படத்தை வாங்க முயற்சி செய்தேன், ஆனால் எனக்கு தகுதி இல்லை என கூறி விட்டதாக பேசி இருந்தார். மேலும் இவர் நேர்கொண்ட பார்வை குறித்து தான் பேசுகிறார் எனவும் தகவல்கள் வைரலானது.

இது குறித்த அளித்த பேட்டி ஒன்றில் நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி தான் பேசியதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் படம் எனக்கு கிடைக்கவில்லை என்பதில் வருத்தம் இருந்தாலும் இந்த படம் அஜித் ரசிகர்களை தாண்டி அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருப்பதாக நம்ப தகுந்த ஒருவரிடம் தகவலை கேட்டறிந்தேன் என கூறியுள்ளார்.

இதனால் நேர்கொண்ட பார்வை திரைப்படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.