Nerkonda Paarvai FDFS Details : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
நேர்கொண்ட பார்வை எப்போது ரிலீஸ் என்பது உறுதியாகி விட்டதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் முதல் ஷோ எப்போது என்ற கேள்வியை எழுப்ப தொடங்கினர், தற்போது அதற்கும் பதில் கிடைத்து விட்டது.

Nerkonda Paarvai FDFS Details : எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தரியாங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் மற்றும் பலர் நடிக்க வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து நேற்று இப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

விக்ரமுடன் மீண்டும் இணைந்த ரஹ்மான் – மிரட்டலான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோ எத்தனை மணிக்கு தொடங்கும் என்று கேள்வி எழுப்ப தொடங்கினர். தமிழக அரசு 24 மணி நேரமும் தியேட்டர்களில் படங்களை ஒளிபரப்ப அனுமதி அளித்திருப்பதால் இந்த சந்தேகம் எழ தொடங்கியது.

இந்நிலையில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி அதிகாலை 4 மணிக்கு படத்தின் முதல் காட்சி தொடங்குவது உறுதியாகியுள்ளது.

மேலும் நள்ளிரவில் ரிலீஸாகுமா? ஆகாதா? என்பது குறித்த தகவல்கள் ரீலிசுக்கு நெருங்கும் நேரத்தில் தான் தெரிய வரும் என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.