Nerkonda Paarvai Business : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Nerkonda Paarvai Business :

இப்படம் இன்னும் வியாபாரமாகவில்லை என்றொரு தகவல் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதை படக்குழு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தளபதி 63 செட்டில் இருந்து ரசிகர்களுக்கு ஹாய் சொன்ன விஜய் – அதுவும் எப்படி தெரியுமா?

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இது ஒருபக்கமிருக்க இப்படம் இன்னும் வியாபாரமாகவில்லை என்றொரு தகவல் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதை படக்குழு தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

மேலும் இப்படத்தின் அனைத்து ஏரியாவும் விற்றுத்தீர்ந்துவிட்டதாகவும் விஸ்வாசம் வெற்றியால் இப்படத்தின் வியாபாரம் அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.