Nerkonda Paarvai 1st Week Collection Report is Here.! | Thala Ajith | H Vinoth | NKP Collection Records | Kollywood Cinema news
முதல் வார முடிவில் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூல் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Nerkonda Paarvai 1st Week Collection : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் முதல் முறையாக எச். வினோத் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படமான நேர்கொண்ட பார்வை கடந்த வாரம் திரைக்கு வந்தது.

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலிலும் விசுவாசத்திற்கு நிகராக மாஸ் காட்டி வருகிறது.

பரத் சுப்ரமணியம் கேரக்டர் எங்கிருந்து வந்தது தெரியுமா? – முதல் முறையாக வெளிவரும் நேர்கொண்ட பார்வை சீக்ரெட்ஸ்.!

முதல் நாள் சென்னை வசூல் மெர்சல் பட சாதனையை முறியடித்தாலும் சர்கார் படத்தின் சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தது.

ஆனால் ஒரு கிளாஸான படம் இப்படியான வசூலை ஈட்டுவதே மிக பெரிய சாதனை தான் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கூறப்பட்டன.

தற்போது ஒரு வார முடிவில் இப்படம் சென்னையில் மட்டும் ரூ 5.55 கோடி வசூல் செய்துள்ளது. ஓவர்சீஸ் வசூல் சுமார் 1 மில்லியன் டாலர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் வசூலை விடுங்க.. எனக்கு தேவை இது தான் – நேர்கொண்ட பார்வை பற்றி தல அஜித் கூறிய தகவல்.!

மேலும் இன்றும் விடுமுறை என்பதால் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.