Nerkonda Paaravai
Nerkonda Paaravai

Nerkonda Paaravai :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

விஸ்வாசம், பேட்ட படங்களின் வசூலை முறியடித்த காஞ்சனா 3 – மாஸ் காட்டும் லாரன்ஸ்!

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் இப்படம் வெளிவராவிட்டாலும் அன்றைய தினம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக டீசர் அல்லது சிங்கிள் டிராக் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் தற்போதுவரை எதிர்பார்த்து வருகிறார்கள்.

ஆனால் அப்படி எதுவும் வெளியாகாது என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இந்நிலையில் மீண்டும் படக்குழுவை விசாரித்தபோது மீண்டும் அதையே படக்குழு பதிலாக தந்துள்ளனர்.

மிஞ்சி போனால் நாளை அஜித்தை வாழ்த்தி ஒரு புதிய போஸ்டர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.