Neppolean to act as Hero in Hollywood :

Neppolean to act as Hero in Hollywood கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’.

முழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்ட்னி, தன்னுடைய நண்பரின் உறைந்த குளத்தில், ஸ்கேட்டிங் பயிற்சியாளராக தனது பணியைத் துவக்குகிறார்.

கூடுதல் மாணவர்களை ஈர்க்கும் விதத்தில், ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஒன்றை வடிவமைத்து, தனது மருமகளுடன் விநியோகித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது பள்ளிப்பருவ காதலன் ஆரன் நோபிள் தனது மருமகளை ஸ்கேட்டிங் பயிற்சியில் சேர்ப்பதற்காக கோர்ட்னியை சந்திக்கிறார்.

காரணம் சொல்லாமல் பிரிந்து சென்ற பள்ளிப்பருவ காதலன் ஆரன், பிரிவின் பாதிப்புகளில் இருந்து போராடி மீண்டு, வாழ்க்கையை சீரமைத்துக் கொண்டிருக்கும் கோர்ட்னி,

பல ஆண்டுகளுக்கு பின் நடந்த இந்த சந்திப்பின் தாக்கம் என்ன, அவர்கள் வாழ்வில் நடந்ததென்ன, காதலர்கள் இணைந்தார்களா என்பதே இப்படத்தின் கதைகளம்.

உணர்வுகளின் கொந்தளிப்பில் இருக்கும் பள்ளிப்பருவ காதலுக்கும், வாழ்வின் யதார்த்தங்களும், நிதர்சனங்களும் புரிந்த நிலையில் அதனை அணுகும் போதுள்ள வித்தியாசத்தையும் மிகவும் நளினமாகவும், சுவராஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டானியல்.

இப்படத்தில் கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோருடன் இணைந்து, ஏஜண்ட் குமார் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து இனி ஹாலிவுட்டில் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் நெப்போலியன்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.