Nepolieon Interview About Thala Thalapathy
Nepolieon Interview About Thala Thalapathy

விஜயுடன் பேசுவதில்லை அஜித்துடன் நடித்தால் இப்படி தான் நடிப்பேன் என பல விஷயங்களை பேசியுள்ளார் நடிகர் நெப்போலியன்.

Nepolieon Interview About Thala Thalapathy : தமிழ் சினிமாவில் 1980-களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

அதன் பின்னர் அரசியலில் நுழைந்த நெப்போலியன் சினிமாவில் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின்னர் சீமராஜா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் விஜய் பற்றி பேசியுள்ளார்.

கோட்டீஸ்வர பெண்ணுடன் டும் டும் டும்.. சிம்புவின் திருமணம் குறித்து வெளியான அதிரடி தகவல்கள்!

விஜய் பற்றி கேட்டதற்கு அவருடன் நான் பேசுவதில்லை, அவருடைய படங்களையும் பார்ப்பதில்லை. போக்கிரி படத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவரது படங்களை 13 வருடமாக பார்ப்பதில்லை என கூறியுள்ளார்.

அதனையடுத்து அஜித் பற்றி கேட்டதற்கு இதுவரை நான் சேர்ந்து நடிக்காத நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அவருக்கு வில்லனாக நடிக்க மாட்டேன். அவருடன் இணைந்து ஒரு சப்போர்ட்டிங் ரோலில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

நெப்போலியனின் இந்தப் பேச்சைக் கேட்ட அஜித் ரசிகர்கள் உங்களின் ஆசைகள் விரைவில் நிறைவேறும். அஜித்துடன் உங்களை ஸ்கிரீனில் பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.