நாளை மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்கு நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nenjukku Needhi Teaser Announcement : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது பிரபல இயக்குனரான போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கனா திரைப்படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார்.

நாளைக்கு மதியம் 12.30 மணிக்கு கொண்டாட்டத்திற்கு தயாரா? போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

வலிமை படத்தைத் தயாரித்த போனிகபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நாளை மதியம் 12.30 மணிக்கு நெஞ்சுக்கு நீதி படத்தின் டீஸர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.