உதயநிதி, அருண் ராஜா கூட்டணியில் வெளியான நெஞ்சுக்கு நீதி படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம் வாங்க.

Nenjukku Needhi Movie Review : உதயநிதி ஸ்டாலின், தான்யா, ஆரி என பலர் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.

வெல்லுமா உதயநிதி, அருண் ராஜா  கூட்டணி?? - நெஞ்சுக்கு நீதி படத்தின் முழு விமர்சனம்

கதைக்களம் :

பொள்ளாச்சியில் ஒரு பக்கம் திருவிழா நடக்க மறு பக்கம் ஒரு வேளை மூன்று பெண்கள் கடத்தி கற்பழிக்கப்பட்டு அதில் இரண்டு பெண்கள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களிடம் இருந்து தப்பித்த ஒரு பெண் என்னவானார்? கேஸை எடுத்து விசாரிக்கும் உதயநிதி குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதைக்களம். ஜாதி, மதம் பார்க்காமல் எல்லோரும் சமம் என்று ஒற்றுமையை பற்றி பேசும் படமாக அமைந்துள்ளது நெஞ்சுக்கு நீதி.

படத்தை பற்றிய அலசல் :

உதயநிதி மட்டும் இல்லாமல் படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் அந்த கதாபாத்திரமாக மாறி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆர்டிக்கல் 15 படத்தின் ரீமேக்கான இந்த படத்தை தமிழ் மக்களுக்கு ஏற்றாற்போல திரைக்கதையில் மாற்றங்களைக் கொண்டு வந்து அசத்தி உள்ளார் இயக்குனர் அருண் ராஜா காமராஜ்.

படத்தின் இசை மிகப் பெரிய பலம். ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

வெல்லுமா உதயநிதி, அருண் ராஜா  கூட்டணி?? - நெஞ்சுக்கு நீதி படத்தின் முழு விமர்சனம்

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்

2. நடிகர் நடிகைகள் நடிப்பு

3. இசை

4. ஒளிப்பதிவு

5. திரைக்கதை

தம்ப்ஸ் டவுன் :

குறை என சொல்வதற்கு எதுவும் இல்லை.