விஜய் டிவி சீரியல் நடிகை ஒருவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியலில் ஃப்ரீயா பவானி சங்கர் விலகிய பிறகு அவருக்கு பதிலாக நடிக்க தொடங்கியவர் சரண்யா.

இந்த சீரியலைத் தொடர்ந்து இவர் ஆயுத எழுத்து போன்ற சீரியல்களில் நடித்தார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய ரன் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். ஆனால் இந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது சரண்யா ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் ஒன்றில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இந்த சீரியல் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.