Nenjam Marapathillai Review

எஸ் ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Nenjam Marapathillai Review : படத்தின் கதைக்களம் :

எஸ் ஜே சூர்யா அவரின் மனைவி நந்திதா ஸ்வேதா மற்றும் சிறு வயது மகன் இவர்களுடன் 4 வேலையாட்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து காட்டுக்கு நடுவில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்கி வசிக்கிறார்கள்.

எஸ் ஜே சூர்யாவின் மகனை பார்த்துக்கொள்ளும் பணியாளாக வேலையில் சேருகிறார் ரெஜினா கெஸன்ட்ரா. எஸ் ஜே சூர்யாவிற்கு ரெஜினா மீது காதல்.

இதனால் தன் மனைவி நந்திதா ஸ்வேதா ஊரில் இல்லாதபோது ரெஜினாவின் பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுகிறார். எஸ் ஜே சூர்யா உடன் சேர்ந்து அந்த நான்கு வேலையாட்களும் இந்த பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர்.

அநியாயமாக கொலை செய்யப்பட்ட ரெஜினா தெரியாத மாதிரி அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

பொதுவாக செல்வராகவன் படங்கள் என்றால் கதை புரிந்தும் புரியாதது போல தான் இருக்கும். இந்த படமும் அப்படித்தான்.

நடிப்பு :

எஸ் ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸன்ட்ரா என அனைவருமே தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்.

இசை :

யுவன் சங்கர் ராஜாவின் திகிலூட்டும் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பலம்.

இயக்கம் :

செல்வராகவனின் இயக்கம் பற்றி சொல்லத் தேவையில்லை. மிகவும் நேர்த்தியாக இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

நடிகர், நடிகைகளின் நடிப்பு
இசை
இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

வழக்கமான பேய் கதை

REVIEW OVERVIEW
நெஞ்சம் மறப்பதில்லை
nenjam-marapathillai-reviewமொத்தத்தில் நெஞ்சம் மறப்பதில்லை மனதிற்குள் பதியும் திரைப்படமாக இருக்கும்.