இயக்குனர் நெல்சன் திலீப் குமார் பகிர்ந்திருக்கும் ஜெய்லர் அப்டேட் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக உயர்ந்து வருபவர் நெல்சன் திலீப் குமார். நயன்தாராவின் கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அதனை தொடர்ந்து டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் இப்படத்தில் பல மொழி உச்ச நட்சத்திரங்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் ஜெய்லர் குறித்த அப்டேட்டை பகிர்ந்திருக்கும் நெல்சன் திலீப் குமாரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த விகடன் விருது நிகழ்ச்சி விழாவில் பங்கேற்ற இயக்குனர் நெல்சன் “ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இன்றுடன் நிறைவு பெற்றதாகவும், படம் சீக்கிரமாக தயாராகி வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.