Nelson Salary for Thalapathy 65 Movie

தளபதி 65 படத்திற்காக நெல்சன் திலிப்குமார் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Nelson Salary for Thalapathy 65 Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயற்றியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்குபிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருந்த படத்தில் நடிக்க இருந்தார் விஜய்.

முதலில் பாதி கதையை கேட்டு முருகதாசுக்கு நடித்த விஜய் மீதி கதையை கேட்டு அப்செட் ஆனார். கதையில் மாற்றங்களைச் செய்யச் சொல்லியும் முருகதாஸ் செய்த மாற்றங்கள் பெரிய அளவில் விஜயை ஈர்க்கவில்லை. இதனால் அவருக்கு நோ சொல்லி விட்டார்.

அதன் பின்னர் நெல்சன் திலீப்குமார் கூறிய கதையை கேட்டு அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

தற்போது இந்த படத்திற்கு நெல்சன் 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் 3-வது படத்துலயே இவ்வளவு பெரிய சம்பளமா என தமிழ் திரையுலகமே வியந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.