சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து நெல்சன் யாரை வைத்து படம் இயக்குகிறார் என தெரியவந்துள்ளது.
Nelson Movie After Thalaivar 169 : தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார். இரண்டு படங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் யாருடைய கெட்ட நேரம் என தெரியவில்லை இதுவரை வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் இந்த படத்தில் மோசமாக சொதப்பி விட்டார். இதனால் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு என்னவாகும் என ரசிகர்கள் குழம்பிப் போயிருந்த நிலையில் இருவரும் இணைவது உறுதி ஆகிவிட்டது.
இந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் நடிகர் தனுஷை சந்திக்க வாய்ப்பு கிடைக்க அவருக்கு ஒரு கதை சொல்ல அதுவும் தனுஷுக்கு பிடித்துப்போய் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நாள் திருச்சிற்றம்பலம் படத்தை முடித்துவிட்டு பிறகு ஒரு படத்தில் நடித்து விட்டு பின்னர் தனுஷ் நெல்சன் இயக்கத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷை டார்க் காமெடி படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.