இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன் திலீப்குமார். நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜயின் பீஸ்ட் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அனைவருக்கும் பரிச்சயமான இயக்குனராக மாறிய இவர் தற்போது ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் திரைக்கு வர இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்திருந்த
நிலையில் இயக்குனர் நெல்சன் இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று இணையதளத்தில் உலா வருகிறது.

அதாவது இயக்குனர் நெல்சன் தனுஷை நேரில் சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாகவும் அந்த கதை தனுசுக்கு மிகவும் பிடித்து விட்டதால் அவர் உடனடியாக ஓகே சொல்லி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நெல்சன் இயக்கத்தில் நடிப்பார் என்றும் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.