நெல்சன் திலீப் குமாரின் நியூ மூவி அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நெல்சன் திலீப் குமார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெய்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் நெல்சன் திலிப் குமாரின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி இயக்குனர் நெல்சன் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் RKFI (ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல்) நிறுவனம் தயாரிக்க இருப்பதாக எக்ஸ்க்ளூசிவான தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. மேலும் இந்த புது காம்பினேஷனில் உருவாக இருக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.