தளபதி 65 படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் இந்த கூட்டணி அமைய அனிருத் தான் காரணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவன படத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் இப்படத்தில் இருந்து விலகிக் கொண்டார்.
இதனையடுத்து இயக்குனர் மகிழ்திருமேனி, பேரரசு என பல பெயர் அடிபட்டு வருகிறது. ஆனால் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தளபதி 65 படத்தை இயக்கலாம் எனவும் கூறப்பட்டது.
விஜய் மற்றும் நெல்சன் ஆகியோர் சந்தித்து கொள்ளவும் கதைகளை கூறவும் அனிருத் தான் காரணம் என கூறப்பட்டு வருகிறது.