டாக்டர் பட வெற்றிக்கு இவங்க தான் காரணம் என பெரிய லிஸ்ட் ஒன்றைப் போட்டு அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார் நெல்சன் திலீப் குமார்.

Nelson Dileep Kumar Thanks to Doctor Team : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து நடிகராக வளர்ந்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் டாக்டர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

டாக்டர் பட வெற்றிக்கு இவங்க மட்டும்தான் காரணம்.. பெரிய லிஸ்ட் போட்டு அனைவருக்கும் நன்றி சொன்ன நெல்சன் - வைரலாகும் பதிவு.!!
சில நேரங்களில், இது பிரச்சினையாக இருக்கிறது : ரோகித் சர்மா

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் 100 கோடி வசூலை பெற்ற முதல் திரைப்படம் டாக்டர் தான். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் இவர்கள்தான் என மிகப் பெரிய லிஸ்டு ஒன்றை வெளியிட்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குனர் நெல்சன்.

அதாவது ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு என்னுடைய முதல் நன்றி என கூறியுள்ளார். மேலும் அனிருத் தனக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறியுள்ளார்.

கொட்டும் மழையிலும் தியேட்டருக்கு Mass Entry கொடுத்த Vishal – வைரலாகும் வீடியோ | HD

இவர்களைத் தொடர்ந்து படத்தில் நடித்த பிரியங்கா மோகன், அர்ச்சனா, வினய் மற்றும் அனைத்து நடிகர் நடிகைகள் ஆகியோர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். படத்தை இணைந்து தயாரித்த கே ஜே ஆர் நிறுவனத்திற்கும் ரசிகப் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அனைவருக்கும் நன்றி தெரிவித்து நெல்சன் திலீப் குமார் பதிவு செய்துள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள பீஸ்ட் படத்திற்கு ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.