Nelson Dhileep Kumar About Thalapathy 65

தளபதி 65 கூட்டணி அமைய இவர் ஒருவரே காரணம் என என் செந்தில்குமார் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Nelson Dhileep Kumar About Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ், அஜய் ஞானமுத்து, வெற்றிமாறன், மகிழ் திருமேனி, பேரரசு இவர்களில் யாரேனும் ஒருவரை இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இவரது இயக்கத்தில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். நெல்சன் திலீப்குமாரின் கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கும் இவர் தான் இசையமைத்து இருந்தார்.

அனிருத் மூலமாகத்தான் தனக்கு தளபதி 65 திரைப்பட வாய்ப்பு கிடைத்ததாகவும் அவருக்கு மிகப்பெரிய நன்றி எனவும் நெல்சன் திலீப்குமார் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். தளபதி 65 திரைப்படத்திற்கும் இவர் தான் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.