சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தொடர்ந்து தனுஷுடன் இணைய உள்ளார் என் சன் திலீப் குமார்.

Nelson and Dhanush Movie Details : தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக தலைவர் 169 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தொடர்ந்து தனுஷுடன் இணையும் நெல்சன்.. பீஸ்ட் படத்தால் எடுத்த முடிவு.!!

பீஸ்ட் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களால் இந்தப் படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக மீண்டும் ரஜினியுடன் இணைவதை உறுதி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

ஒன்லைன் கதையை கேட்ட தனுஷ் கடல் பற்றி எந்தவித தகவலும் சொல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தனுஷ் படத்திற்கு முன்னதாக ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட்டு தான் இந்த படத்தை இயக்க வேண்டும் என நெல்சன் முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தொடர்ந்து தனுஷுடன் இணையும் நெல்சன்.. பீஸ்ட் படத்தால் எடுத்த முடிவு.!!