அது உண்மை இல்லை என தனுஷ் படம் குறித்து நெல்சன் திலீப் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார்.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார்.
எதிர்பாராத விதமாக இந்த திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இருந்த போதிலும் ரஜினியை வைத்து இயக்கி வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று நெல்சனுக்கு பெரிய கம்பேக் கொடுத்துள்ளது.
இப்படியான நிலையில் இவர் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது குறித்து நெல்சன் இடம் கேள்வி எழுப்ப அவர் தனுஷ் படம் குறித்து வெளியான தகவல் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் படம் இப்போதுதான் வெளியானது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தான் அடுத்த படம் பற்றி யோசிக்க வேண்டும். தனுஷை இயக்குவது இன்னும் உறுதியாகவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த தகவலால் தனுஷ், நெல்சன் கூட்டணியை எதிர்பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.