Nellikaai Pakku Uses : Learn the benefits of gooseberry! | Health Tips | Natural Beauty Tips | Beauty Tips | Health Properties

Nellikaai Pakku Uses :

நெல்லிக்காய் பாக்கு கேள்விப்பட்டதுண்டா? இதோ நெல்லிக்காய் பாக்கின் பயன்களை, தெரிந்து கொள்ளுங்கள்!..

☆ வெயிலில் உலர்த்திய நெல்லிக்காய்க்கு பாக்கு என்பது பெயர். ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பாக்கை உட்கொண்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

☆ ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மெதுவாக மென்று அதன் சாற்றை விழுங்கி வர கர்ப்பகாலத்தில் ஏற்படும் குமட்டல் குணமாகும்.

☆ முதுமை அடைவதை தடுத்து முகச்சுருக்கத்தை மறைத்து,என்றும் இளமையாகவே இருக்க உதவி செய்யும்.

☆ வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் ஒரு முறைக்கு மூன்று முறை உலர்ந்த நெல்லிகாயை மென்று சாப்பிடலாம்.

☆ தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்கொதிப்பு நீங்கும்.

☆ வயிற்றில் உள்ள நச்சுக்களை
வெளியேற்றி, வயிற்று வலியில் இருந்து உடனடி தீர்வு கிடைக்கும்.

☆ தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொண்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

☆ தினமும் சாப்பிட்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிகாயை மென்று சாறை முழுங்கினால் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்சனை விரைவில் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here