Nellai DSP Wishes to Sivakarthikeyan
Nellai DSP Wishes to Sivakarthikeyan

உண்மையான நண்பனா இருந்தா இப்படித்தான் இருக்கணும் என வீடியோ ஒன்றை பகிர்ந்து சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார் நெல்லை போலீஸ் அதிகாரி.

Nellai DSP Wishes to Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். பல சாதனைகளையும் தடைகளையும் தாண்டி இன்று சினிமாவின் முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார்.

இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் இதுநாள் வரை ஆல்கஹால் குடித்ததில்லை. சிகரெட் பிடித்ததில்லை. என்னுடைய நண்பர்களும் என்னை கட்டாயப்படுத்தியது இல்லை.

அவர்கள்தான் உண்மையான நண்பர்கள் என பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் இவ்வாறு பேசிய வீடியோவை நெல்லை துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இது எல்லாமே உண்மை.. கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட மீரா மிதுன் – கலாய்க்கும் ரசிகர்கள்!

மேலும் அந்தப் பதிவில் நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க . குடிக்க , புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான்.
Thanks @Siva_Kartikeyan

Smokingkills #Drinkingkilla என பதிவிட்டுள்ளார்.

அதற்கு சிவகார்த்திகேயனும் நன்றாக சொன்னீர்கள். நன்றி சார் என பதிவிட்டுள்ளார்.