Negative Force

வீட்டில் உள்ள இந்த எட்டு விஷயங்களை நீக்குவதன் மூலம் செல்வம் பெருகி ஐஸ்வர்யம் சித்திக்கும் என்று முன்னோர் கூறியுள்ளனர்.

* வீட்டில் சிலந்தி வலை என்னும் ஒட்டடை இருக்கவே கூடாது.

* புறாக்கூடு என்பது வீடுகளில் கட்டாயம் இருக்க கூடாது. புறாக்கூடு இருக்கும் இடங்களில் வறுமை என்பது வீடு தேடி வரும் என்பது ஐதீகம்.

* பொதுவாக இல்லங்களிலோ அல்லது அதன் அருகிலோ தேன்கூடு இருக்க கூடாது. எதிர்மறை எண்ணங்கள், கடன் தொல்லைகள் ஏற்படும். வறுமை வளரும் நிலை உள்ளது.

* வீட்டில் உள்ள நிலைக்கண்ணாடிகள் மஹாலக்ஷ்மியின் அம்சம். அவை உடைந்தோ சேதாரமான முறையிலோ இருக்க கூடாது.

* ஒரு வீட்டில் வவ்வால் குடியேறுவது என்பது துரதிர்ஷ்டத்தின் அடையாளம்.

* தண்ணீர் குழாய்களில் நீர் வீணாகி கொண்டே இருக்க கூடாது.

* பூஜை அறையிலோ அல்லது வீட்டின் எந்த இடத்திலும் காய்ந்த பூக்கள் இருக்க கூடாது.

* மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது விரிசல் இல்லாத சுவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here