neet exam
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த மாணவர் இர்ஃபானின் தந்தை ஒரு போலி மருத்துவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Neet Exam fraud student Irfan father is fake doctor – சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்கிற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவகல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக சமீபத்தில் புகார் எழுந்தது. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விசாரணையில், உதித் சூர்யாவின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் கேரளாவை சேர்ந்த ஒரு இடைத்தரகரிடம் ரூ.20 லட்சம் லஞ்சமாக கொடுத்தது ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்பின் உதித் சூர்யாவின் நண்பர்கள் மற்றும் அவர்கள் தந்தைகள் ஒன்றாக இணைந்து நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தளபதி 64 அப்டேட் : விஜய்க்கு விஜய் சேதுபதி வில்லனானது எப்படி தெரியுமா? – இவர் தான் காரணம்.!

உதித் சூர்யாவிற்கு பின் இர்ஃபான் என்கிற மாணவர் சிக்கினார். சேலம் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். அவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மருத்துவ கல்லூரியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரின் தந்தை முகமது சஃபி போலி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. மருத்துவ படிப்பை பாதியில் விட்டுவிட்டு வாணியம்பாடி மற்றும் வேலூரில் இரு க்ளினிக்குகளை அவர் நடத்தி வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.