YouTube video

Neet Exam 2020 Issue In Tamil Nadu : அதிமுக ஒருபோதும் NEET ஐ விரும்பவில்லை. NEET முதன்முதலில் நடத்தப்பட்டது 2016-17 ஆம் ஆண்டில் தான். அப்போது தமிழ்நாட்டுக்கு ஆளும் அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் விலக்கு கிடைத்தது.

2017 பிப்ரவரியில், தமிழ்நாட்டை NEETலிருந்து நிரந்தரமாக விலக்குவதற்கு இரண்டு மசோதாக்களை அதிமுக (தமிழக அரசு) அறிமுகப்படுத்தியது, அது ஜனாதிபதி ஒப்புதலுக்காகவும் அனுப்பப்பட்டது.

இதற்கிடையில், NEET தேர்வு 2017இல் நடத்தப்பட்டது. 2017-18 ஆம் ஆண்டில், State Board மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கி, அதிமுக அரசு உத்தரவு பிறப்பித்தது, இந்த உத்தரவை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. Division Bench முன் மேல்முறையீட்டில், மீண்டும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அதை நிராகரித்தது.

NEET கொண்டு வரப்பட்டதே திமுகவும் – காங்கிரஸும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருக்கும் போது தான்.

அதிமுக, இன்னும் ஒரு வருடத்திற்கு விலக்கு அளிக்க ஒரு ordinance கொண்டு வர முயற்சித்தது. இருப்பினும், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு நீட் தேர்வு அவசியம் என்ற தீர்ப்பை பெற்று கொடுத்தார்.

ஆனால் இன்று நீட் தேர்வுக்கு முழுக்க முழுக்க அதிமுக அரசு தான் காரணம் என திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் குற்றம் கூறி அரசியல் நடத்தி வருவது தான் வேடிக்கையாக உள்ளது.

தமிழக மாணவர்கள் மீது அக்கறை உள்ள அரசாக திமுக செயல்பட வேண்டிய நேரத்தில் செயல்பட்டு இருந்தால் நமக்கு ஏன் இந்த தலைவலி வந்திருக்க போகுது என விவரம் அறிவித்தவர்கள் பேசி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.