Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Neck Pain :

☆ நமது தலை மற்றும் உடலை இணைக்கும் கழுத்துப் பகுதி பலமற்ற சாதாரண எலும்புகளால் ஆனது. ஆனால் இந்தப் பகுதிகளை சூழ்ந்துள்ள தசைகளின் வலிமையால் தான் நம்மால் ஆரோக்கியமாக இயங்க முடிகிறது.

☆ மூளைக்கு போகும் ரத்த ஓட்டத்தை பாதுகாத்தல், காதுகளின் சமநிலையை நிலை நிறுத்துதல், கை, கால்களுக்கு பலம் மற்றும் அசைவை உண்டாக்குதல் மற்றும் மார்பு தசைகளை சீராக இயக்க கழுத்து மட்டுமன்றி, மேல் முதுகு, தோள்பட்டை, கை மற்றும் மார்பு பகுதிகளிலும் வலியுண்டாகிறது.

உங்கள் காதுக்குள் பூச்சி அல்லது வண்டு புகுந்து விட்டதா? எப்படி வெளியேற்றுவது? தெரிந்து கொள்வோமா!.

☆ கழுத்து எலும்புகளில் தேய்வு, இடைச்சவ்வு விலகுவது அல்லது அது வீங்கி அருகிலுள்ள நரம்பை அழுத்துவது போன்ற காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம்.

☆ கழுத்து எலும்புகள் மற்றும் தசைகள் தங்கள் இடத்தைவிட்டு சில மில்லி மீட்டர்கள் இடம் பெயர்ந்தாலே தலைச்சுற்றல், தசை இறுக்கம், விரல்களால் வேலை செய்ய சிரமம் என பல உபாதைகள் ஏற்படுகின்றன.

☆ தொடர்ந்து பல மணி நேரத்துக்குத் தொலைக்காட்சி பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது, கழுத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது.

தலையணைகளைத் தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்து கொண்டே உறங்குவது, போன்றவையும் கழுத்து வலிக்கு காரணங்கள் ஆகும்.

எந்த உணவு அதிகமானால் எந்த நோய் தோன்றும் என்பதை அறிந்து கொள்வோம்!

☆ கழுத்தில் இரண்டு எலும்புகளுக்கிடையே சவ்வு போன்ற பொருள் உண்டு. சில நேரங்களில் அந்த எலும்பு அதீத வளர்ச்சியால் துருத்திக்கொள்ளும்.

இந்தத் துருத்தி கொள்ளும் பகுதி, கழுத்திலிருந்து வெளிவருகிற நரம்பு மண்டலத்தை அழுத்தும். சில நேரங்களில் தண்டுவடமும் அழுத்தப்படலாம். இந்த நேரங்களில் கை மட்டுமல்லாமல் காலும் பாதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here