Valimai
தல அ‌ஜித் நடிக்க உள்ள வலிமை படத்தில் நடிக்க உள்ளதாக வந்த தகவலை பற்றி நஸ்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தல அ‌ஜித் நேர் கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இதில் அ‌ஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார்.

தல அ‌ஜித் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளமையாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் அதிகப்படியானா சண்டை காட்சிகள் மற்றும் ரேஸ் காட்சிகள் இடம் பிடித்து உள்ளதாம்.

இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது. அதோடு படத்தின் பூஜை அன்று படத்தின் பெயரை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு இருந்தார் நஸ்ரியா.

இதனால், நஸ்ரியா வலிமை படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவத் தொடங்கியது.

ஆனால், அதில் உண்மை இல்லை என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே பதிவிட்டு உள்ளார். மேலும், இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுவுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.