யூடியூப் சேனல் நேர்காணலில் பேட்டி அளித்த நசிரியா தமிழ் சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன் என்று பேசியுள்ளார். அதனால் மீண்டும் தமிழ்ப்படங்களில் நஸ்ரியா நடிப்பார் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் ரசிகர்களின் மனதில் எக்ஸ்பிரஷன் குயினாக வலம் வருபவர் தான் நஸ்ரியா. இவர் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர்  திருமணம் எனும் நிக்கா என்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் அட்லி இயக்கிய ராஜா ராணி என்ற படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஆழமான காதல் கதையை பதிய வைத்தார் என்றே சொல்லலாம்.

அதையடுத்து தனுஷுடன் இணைந்து நையாண்டி என்ற கலகலப்பான படத்தில் நடித்திருந்த இவர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் படம் நடிப்பதை நிறுத்தி இருந்த நஸ்ரியா  நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் முதல் படமாக  மலையாளத்தில் அவர் கணவரான பகத் பாசில் நடிப்பில் வெளியான “டிரான்ஸ்” படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் நடிகர் நானியோடு இணைந்து “அடடே சுந்தரா” என்ற காதல் கதையில் நடித்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்கில் வெளிவர தயாராக இருக்கும் நிலையில் யூடியூப் சேனல் நேர்காணலில் தற்போது பேட்டி அளித்த நஸ்ரியா தமிழ் சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன் என்றும் தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். அதனால் மீண்டும் தமிழ் சினிமாவில் நஸ்ரியா தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் உள்ளனர்.