Nazriya-Nazim

Nazriya : அஜித்துடன் நடிக்க ஆர்வமாக இருந்த நஸ்ரியா தல 59 படத்தில் இருந்து விலகி கொண்டது ஏன் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள பிங்க் படத்தில் நடிக்க உள்ளார்.

போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தில் முதலில் டாப்சீ வேடத்தில் நடிக்க நஸ்ரியா தான் கமிட்டாகி இருந்தார். அஜித்துடன் நடிக்க மிகுந்த ஆர்வத்திலும் இருந்தார்.

ஆனால் சில காரணங்களால் நஸ்ரியா இப்படத்தில் இருந்து விலகி கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதீத ஆர்வத்துடன் இருந்த நஸ்ரியா இப்படத்தில் இருந்து விலகியது ஏன் எனவும் தற்போது தெரிய வந்துள்ளது. இதுவரை ஹாம்லி வேடங்களில் மட்டுமே நஸ்ரியா நடித்துள்ளார்.

இந்த படத்தில் நஸ்ரியாவை பார்த்து நீங்க வெர்ஜினா இருக்கீங்களா? என்றெல்லாம் கேட்பது போல காட்சிகள் இருக்குமாம். இதனால் தான் நஸ்ரியா இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.