Nazriya Nazim celebrated Valentine's Day

தன் காதல் கணவருடன் காதலர் தினத்தன்று ஜாலி ட்ரிப் சென்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Nazriya Nazim celebrated Valentine’s Day : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நஸ்ரியா. இவர் தமிழில் நேரம் திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா, வாயை மூடி பேசவும் போன்ற திரைப்படங்களில் தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென திரையுலகில் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நஸ்ரியா.

மேலும் பகத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெரிதாக திரைப்படம் எதுவும் நடிக்கவில்லை.

இந்நிலையில் காதலர் தினத்தை தன் கணவர் பாசிலுடன் ஜாலியான ஒரு ட்ரிப் மூலம் கொண்டாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் அவர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.