Nayanthara With Simbu and Dhanush

சிம்பு மற்றும் தனுஷுடன் நைட் பார்ட்டியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nayanthara With Simbu and Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் உருவாகி வருகின்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நயன்தாரா நடிகர் சிம்புவை காதலித்து வந்ததும் இவர்கள் காதல் பிரேக்கப்பில் முடிந்ததும் அனைவரும் அறிந்ததே. தற்போது நயன்தாரா நடிகர் சிம்பு மற்றும் தனுஷுடன் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.