விக்னேஷ் சிவன் மீதுள்ள அன்பு பற்றி நயன்தாரா பகிர்ந்துள்ள தகவலின் வீடியோ வைரல்.

தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நயன்தாரா அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கனெக்ட் திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் தனது காதல் கணவரான விக்னேஷ் சிவன் குறித்து பகிர்ந்து உள்ள சுவாரசியமான தகவல் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் மீதுள்ள அன்பை… முழுமையாக வெளிப்படுத்திய நயன்தாரா.!

அதில், ஹார்ட் என டிடி நயனிடம் கேட்க அதற்கு அவர், மை ஹஸ்பண்ட் என பதில் அளித்திருக்கிறார். மேலும் அவர், லவ்னு இருக்கிறது என்னன்னு நான் நினைக்கிறேனோ அது அவர்தான், நம்ம எத பத்தியும் கவலைப்பட தேவையில்லை யார் என்ன சொன்னாலும் எந்த மாதிரி சிச்சுவேஷன் வந்தாலும் இவர் கூட இருந்தா எல்லாமே கரெக்டா தான் இருக்கும் என்று விக்னேஷ் சிவன் மீது உள்ள அன்பை வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.