விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி லேடிஸ் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, வல்லவன், பில்லா ,யாரடி நீ மோகினி, வில்லு, ராஜா ராணி, அண்ணாத்த, பிகில் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்திலும் இவரே நடிக்க போவதாகவும் தகவல் வெளியானது.
நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கணவருடன் கைகோர்த்து நடக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது