எதையும் நம்பித்தான், ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். யாரையும் நம்பாமலும் இருக்க முடியாதுதானே.!
இந்நிலையில், கேரளாவில் பிறந்த நடிகை நயன்தாரா, சிறு வயதிலேயே மலையாள மொழி டிவி சேனல்களில் தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு, மலையாள மொழி படங்களில் நடிக்க துவங்கிய அவருக்கு முதல் முதலில் கிடைத்த கோலிவுட் வாய்ப்பு தான் கடந்த 2005-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான “ஐயா” என்கிற திரைப்படம் என்பது தெரிந்ததே.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து, தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு சந்திரமுகியில் கிடைத்தது.
மெல்ல மெல்ல தமிழ் திரையுலகில் நல்ல பல படங்களில் நடிக்க துவங்கிய நடிகை நயன்தாரா, வெகு சீக்கிரத்தில் முன்னணி நடிகையாக மாறினார். உலக நாயகன் கமலை தவிர, தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து அசத்திய நயன்தாரா, இந்த 19 ஆண்டு கால பயணத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், தனது 75-வது திரைப்படத்தை வெளியிட்டு அசத்திய அவர், இப்பொது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் 5 திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
அண்மையில் அன்னப்பூரணி என்ற படத்தில் ப்ராமண வீட்டு பெண்ணாக நடித்திருந்த நயன்தாரா, அந்த படத்தில் வரும் ஒரு கட்சியில், சமைக்கும் முன் புர்கா அணிந்து தொழுகை செய்வது போன்ற காட்சிகளில் நடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். அதாவது OTTயில் வெளியான அன்னப்பூரணி படத்தையே அதிலிருந்து நீக்கும் அளவிற்கு பிரச்சனை வளர்ந்தது. அதே போல, கடந்த 2011-ம் ஆண்டு பிரபல நடிகர் பிரபுதேவாவுடன் இணைத்து நயன்தாரா கிசுகிசுக்கப்பட்டார்.
இது எந்த அளவிற்கு சென்றது என்றால், பிரபுதேவா அவரது மனைவி ராம்லத்தை விவாகரத்து செய்யும் அளவிற்கு பிரச்சனை பெரிதானது. அதற்கு முன்னதாக, பிரபல நடிகர் சிம்புவுடன் நயன்தாரா காதல் வயப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் பரவியது.
அதற்கு ஏற்றாற்போல “வல்லவன்” படத்தில், நயன்தாராவுடனான காட்சிகளில் எல்லை மீறிய கவர்ச்சியை புகுத்தினார் அப்படத்தின் இயக்குனர் சிலம்பரசன் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 19 ஆண்டுகளில் பல சர்ச்சைகளை சந்தித்து வந்த நயன்தாரா, இப்பொது ஒரு படத்திற்கு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகின்றார். இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அடுத்த ஆண்டே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
அதிலும் சில சர்ச்சைகள் எழுந்தாலும், வெகு சில நாள்களில் அந்த பிரச்சனைகளை காற்றில் மறைந்தது. இப்பொது, தனது கணவருடன் இணைந்து ஒரு சிங்கப்பூர் நிறுவனத்துடன் பிசினெஸ் செய்து வருகின்றார் நயன்தாரா.
‘Femi9’ என்ற பெயர் பெண்களுக்காக நாப்கின்கள் மற்றும் பிற அழகு சாதனா பொருட்களை அவர் விற்பனை செய்து வருகின்றார். அதற்கு மாடலாகவும் நயன்தாரா திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் பிசினெஸ் என்று பிசியாக வலம்வரும் நயன்தாராவை கவிழ்க்க முயன்றுள்ளது ஒரு கும்பல்.
தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தான் நயன்தாரா. தனது நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ,அவர் அதன் மூலம் தான் தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவார்.
இந்நிலையில், சுமார் 3.3 மில்லின் பார்வையாளர்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ள நயன்தாராவின் கணக்கு, தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கமும் மூலம் தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். தேவையற்ற டீவீட்ஸ் அல்லது சந்தேகத்திற்கு இடமான விஷயங்கள் அதில் பதிவிடப்பட்டால், தயவு செய்து அதை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை நயன்தாரா.
ஏமாற்றாதே, ஏமாறாதே என்பது போல, நயன் மனசு வருத்தப்பட்டிருக்கிறது. ஆதலால், கொஞ்சம் கவனிங்க, நெட்டிசன்ஸ்..!