Nayanthara & Thalapathy 63

Nayanthara & Thalapathy 63 : தளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம் படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தமிழில் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

இந்த படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

கோலிவுட்டில் வலம் வந்து மார்க்கெட்டை இழந்த நயன்தாராவுக்கு இந்த படம் மிக பெரிய செகண்ட் இன்னிங்க்ஸை கொடுத்திருந்தது.

இதனையடுத்து நயன்தாரா இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான வலம் வருகிறார். இதனால் அட்லீ தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 63 படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்.

இது குறித்து நயன்தாராவிடம் பேசியத்திற்கு அவர் சம்பளமாக ரூ 6 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வைரலாகி வரும் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, வதந்தியாகவும் இருக்கலாம். உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.