Thalapathy 63

Nayanthara Scene : தளபதி 63 படத்தில் நயன்தாராவின் முதல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அது என்ன என்ற விவரமும் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் விஜய் 63 படத்தை அட்லீ இயக்க AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

SK 15 டைட்டில் ஹீரோ தான், ஆனால் அது விஜய்..

இந்த படத்தில் நயன்தாரா தான் நாயகியாக நடிக்கிறார். இவர் சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அது குறித்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் முதல் காட்சி குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் முதல் முதலாக இந்த படத்திற்காக நயன்தாரா திருமண காட்சியில் நடித்துள்ளார்.

அதுவும் ஒரு சர்ச்சில் தான் படமாக்கியுள்ளனர். அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்த போதும் நயன்தாராவிற்கு சர்ச்சில் திருமணம் நடைபெறுவது தான் முதல் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.