Nayanthara
முன்னனி நடிகை நயன்தாரா தான் நடிக்க இருக்கும் படங்களில் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார்.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.

தளபதி விஜயுடன் ஜோடியாக நடித்து தீபாவளி விருந்தாக வெளியான பிகில் வெற்றியை தொடர்ந்து, தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் – பிரபல நடிகை சூசகமாக சொன்னது .!

தற்போது இவரின் கைவசத்தில் தர்பார்,நெற்றிக்கண் மற்றும் RJ பாலாஜி இயக்கி நடிக்கும் மூக்குத்தி அம்மன் படங்கள் கைவசம் உள்ளது.

தர்பார் படத்தில் நடித்து முடித்து தற்போது டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. முன்பு இவரின் சம்பளம் 5 கோடியாக இருந்தது.

இப்பொழுது 8 கோடியாக உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சம்பளம் தற்போது நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நெற்றிக்கண் மற்றும் மூக்குத்தி அம்மன் படங்களில் இருந்தா இல்லை புதிதாக நடிக்க ஒப்பந்தமாக உள்ள படங்களில் இருந்தா என்று இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here