Nayanthara Rejected Andhadhun Telugu Remake
Nayanthara Rejected Andhadhun Telugu Remake

கோடி கோடியாய் கொடுத்தாலும் அந்த பாடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என கேலி வந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார் நயன்தாரா.

Nayanthara Rejected Andhadhun Telugu Remake : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. படம் ஒன்றுக்கு ரூபாய் 5 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

நாளுக்கு நாள் நயன்தாராவின் மவுசு கூடிக் கொண்டே செல்கிறது. இவர் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

வழக்கமாக நயன்தாரா வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக கொடுக்க தயாரிப்பாளர் தயாராக இருந்தும் காதலனுக்காக கணவரை கொல்லும் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.