அட்லி இயக்கும் படத்தில் இருந்து நயன்தாரா விலகி விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

Nayanthara Quits From Sharukh Khan Movie : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. அதன் பின்னர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

பலவீனம் தெரிகிறது, ஒற்றுமையாக இருங்கள் : சோனியா பரபரப்பு பேச்சு

அட்லி இயக்கும் படத்திலிருந்து விலகிய நயன்தாரா?? வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபல தமிழ் நடிகை.!!

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக் கானை வைத்து இந்தி படம் ஒன்றை இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். அவர் படப்பிடிப்பில் பங்கேற்ற சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.

இயக்குனர் Ranjith-கும் படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல – விவாதமாக மாறிய பத்திரிகையாளர் சந்திப்பு

ஆனால் தற்போது அவர் சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக நடிகை சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.