Nayanthara in Ponniyin Selvan

Ponniyin Selvan Update : மணிரத்தினம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக பேசப்பட்டது வருகிறது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான திறமை கொண்ட இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம். இவர் நீண்ட நாளாக தன்னுடைய கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க முயற்சி செய்து வருகிறார்.

மணிரத்தினம் படத்தில் விஜயை தொடர்ந்து சிம்புவும் விலகல்? – அவருக்கு பதில் இவர்.!

ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து இந்த படம் தள்ளி போய் கொண்டே வந்த நிலையில் தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது நயன்தாராவையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க மணிரத்தினம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்!

இது மட்டும் உண்மையானால் நயன்தாரா பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.