Nayanthara Plan

Nayanthara Plan : நடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம். ஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா.

தென்னக சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடன் ஜோடி சேர்ந்து விட்டாலும் ஒவ்வொரு முறை நயன்தாரா படம் வெளியாகும் போதும் நயன்தாராவுக்காக இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் சொல்வது தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக அவர் அடைந்திருக்கும் சாதனை.

அன்று சிம்ரனுக்கு நடந்தது; இன்று எமிக்கு நடக்குது – பாவம் டைமிங் மிஸ்ஸாகிடுச்சு!

தற்சமயம் நயன்தாரா ரஜினி ஜோடியாக தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து அவள் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தர்பார் முடிந்த கையோடு அடுத்த மாத இறுதியில் துவங்குகிறதாம். இப்படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.