சென்னையில் பிரபல திரையரங்கை விலைக்கு வாங்கியுள்ளார் நடிகை நயன்தாரா.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்பில் பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்கள் நடித்து வந்த இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

அதே சமயம் காஸ்மெட்டிக் பிசினஸையும் கவனித்து வருகிறார். இவற்றையெல்லாம் கடந்து தற்போது சென்னையில் ஒரு பிரபல திரையரங்கை நண்பர்களுடன் இணைந்து விலைக்கு வாங்கியுள்ளார்.

வடசென்னை பகுதியில் மிகவும் பழமையான திரையரங்கமான அகஸ்தியா தியேட்டரை தான் விலைக்கு வாங்கியுள்ளனர். சாதாரண தியேட்டராக இருக்கும் அகஸ்தியாவை மல்டிபிளக்ஸ் தியேட்டராக முடிவெடுத்துள்ளனர்.

அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.