Nayanthara
நடிக்க வருவதற்கு முன் நயன்தாரா செய்த வேலை குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. தல அஜித், தளபதி விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் நடிக்க வருவதற்கு முன்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக வேலை செய்துள்ளார்.

இது பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது. மேலும் நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியன் குரியன். சினிமாவிற்காக தன்னுடைய பெயரை மாற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.